என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்தியா முன்னேறியது
நீங்கள் தேடியது "இந்தியா முன்னேறியது"
பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim
புதுடெல்லி:
தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது.
கடந்த 2004-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. கடந்த (2017) ஆண்டில் மேலும் 30 இடங்கள் முன்னேறி டாப்- 100 நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.
கடந்த 31-10-2018 அன்றுஉலக வங்கி வெளியிட்ட இந்த (2018) ஆண்டுக்கான சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
சுமார் 125 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியா மிகவும் குறுகிய காலத்தில் இந்த மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றதற்காக தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டதாக டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim
உலக வங்கி இன்று வெளியிட்ட சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது. #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex
வாஷிங்டன்:
தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது.
கடந்த 2004-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. கடந்த (2017) ஆண்டில் மேலும் 30 இடங்கள் முன்னேறி டாப்- 100 நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.
இந்நிலையில், உலக வங்கி இன்று வெளியிட்ட இந்த (2018) ஆண்டுக்கான சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex
×

X